[X] Close

’பேய்ப்படம்னா அதுல நான் நிச்சயம் உண்டு!’ - மனோபாலா கேலி


manobala

மனோபாலா

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Feb, 2019 12:46 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘எல்லாப் படத்திலும் பேயைத் திறந்துவிடுவதே என் வேலையாப் போச்சு. பேய்ப்படம்னாலே அதுல நான் நிச்சயம் இருப்பேன்’ என்று இயக்குநரும் நடிகருமான மனோபாலா தெரிவித்தார்.

நடிகர் மனோபாலா, தனியா சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவர், ‘இந்த ’காஞ்சனா’ படமும் ‘அரண்மனை’ படமும் ஹிட்டாச்சு. அதுலேருந்து பேய்ப்படம்னா நான் கண்டிப்பா வந்துடுறேன். நான் மட்டுமில்ல... கோவை சரளா, நான், ஸ்ரீமன் மூணு பேரும் பேய்ப்படத்துல வந்துடுறோம்.

அதுலயும் முக்கால்வாசி படங்கள்ல, பேயைத் திறந்துவிடுறதே நானாத்தான் இருப்பேன். அப்புறம் இடைவேளைக்கு அப்புறம் பேயும் அவங்களும் என்ன பண்ணிக்கிறாங்க, எப்படிலாம் முட்டிக்கிறாங்கன்னு கதை நகர்றதுக்கே காரணமா இருக்கேன்னா, பாருங்க.

நான் நடிச்சு வெளிவரவேண்டிய பேய்ப்படங்கள் இன்னும் அம்பது இருக்கு. அதெல்லாம் வந்துச்சுன்னா, இன்னும் ரணகளாமயிரும் போங்க!.

இவ்வாறு மனோபாலா தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close