[X] Close

'தளபதி 63' கதைக்களம் எப்படியிருக்கும்? - ஏ.ஆர்.ரஹ்மான் சூசகம்


ar-rahman-about-atlee

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 11:42 am
  • அ+ அ-

'தளபதி 63' கதைக்களம் எப்படியிருக்கும் என்பதை இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லீ மூவரும் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

'தளபதி 63' என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்களம் மற்றும் இசை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்த மாதிரியான கதைக்களம் இருக்கும் படத்தில் ஹாலிவுட்டில் பணிபுரிந்திருக்கிறேன். தமிழில் இதுதான் முதல் முறை. 'பீலே', 'லகான்' மாதிரியான படங்களில் எனது இசை அட்லீக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு இசையின் மீது ஈடுபாடு அதிகம்.

எனது அனைத்து பாடல்களையும் அவர் கேட்டிருக்கிறார். ஏதாவது ஒரு பாடலில் ஒரு சின்ன இடத்தை மட்டும் சுட்டிக்காட்டி பாராட்டும் அளவுக்கு ஈடுபாடு கொண்டவர். எனக்கு இதுமாதிரியான இயக்குநர்கள் பிடிக்கும். இதில் ஆழ்ந்து, ரசித்து, ஆனந்த கண்ணீர் விட்டு பாடல்கள் கேட்பவர்கள். அப்படி அவர்கள் ரசித்தால்தான் பாடலை நன்றாக படமாக்க முடியும்.

''நீங்க கொடுத்தனுப்புங்க சார், நான் பாத்துக்கறேன்'' என்பது போல இல்லாமல், ஒவ்வொரு வரி, ஒவ்வொரு பாடல் பதிவு, இசைக் கலவை என அனைத்திலும் பங்கெடுத்து ரசிக்க நினைப்பார். அது மிகவும் நல்ல விஷயம்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு கலை இயக்குநராக முத்துராஜ் பணிபுரிந்து வருகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close