[X] Close

ராஜேஷ் - சிவகார்த்திகேயன் இணையும் Mr.லோக்கல்


rajesh-sivakarthikeyan-join-hands-in-mr-local

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 02 Feb, 2019 19:43 pm
  • அ+ அ-

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்துக்கு 'Mr.லோக்கல்' என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு 'Mr.லோக்கல்' என்று தலைப்பிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில் சிவகார்த்திகேயன் கோர்ட்-ஷூட் எல்லாம் அணிந்து, கையில் டீ க்ளாஸ் வைத்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளனர். கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஷ் படத்துக்குப் பிறகு, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close