[X] Close

விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன்?


shruti-haasan-pair-with-vijay-sethupathi

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 01 Feb, 2019 18:22 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கிவரும் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதுதவிர, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘சிந்துபாத்’ என இரண்டு படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. மேலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

‘மாமனிதன்’ படத்துக்குப் பிறகு விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தில்தான் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போகிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் ‘சிங்கம் 3’. இந்தப் படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் நிறைவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close