[X] Close

‘96’ கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


99-kannda-movie-first-look-release

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 31 Jan, 2019 14:28 pm
  • அ+ அ-

‘96’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘99’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படத்தை பிற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

கன்னடத்தில் ப்ரீதம் குப்பி இயக்குகிறார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கோல்டன் ஸ்டார் கணேஷும், த்ரிஷா வேடத்தில் மலையாள நடிகை பாவனாவும் நடிக்கின்றனர். கன்னடத்தில் இந்தப் படத்துக்கு ‘99’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில், பல பொருட்களின் ஓவியங்களைக் கொண்டு தலைப்பு வடிவமைக்கப்பட்டது. கன்னடத்தில், ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு தலைப்பை வடிவமைத்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close