[X] Close

மணிரத்னம் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் ஸ்ரேயா: வைரலாகும் வீடியோ


shriya-saran-viral-video

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 24 Jan, 2019 16:35 pm
  • அ+ அ-

மணிரத்னத்தின் ‘ரோஜா’ பாடலை ஹம்மிங் செய்தபடி ஸ்ரேயா பனியில் நனையும் வீடியோ வைரலாகி வருகிறது.

‘இஷ்டம்’ தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா, சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. சிம்பு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்தார் ஸ்ரேயா. மேலும், அரவிந்த் சாமி ஜோடியாக ஸ்ரேயா நடித்த ‘நரகாசூரன்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

இந்நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா சரண். அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘புது வெள்ளை மழை’ பாடலை ஹம்மிங் செய்கிறார் ஸ்ரேயா. அத்துடன், மணிரத்னம் பெயரையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.

‘புது வெள்ளை மழை’ பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை ஹம்மிங் செய்துள்ளார் ஸ்ரேயா. 

இத்தனைக்கும் அந்தப் படம் ரிலீஸாகி 27 வருடங்கள் ஆகின்றன. அதன்பிறகு பனியில் எத்தனையோ பாடல்கள் படமாக்கப்பட்டாலும், காலத்தால் அழிக்க முடியாத பாடலாக ‘புது வெள்ளை மழை’ பாடல் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close