[X] Close

'பேட்ட' VS ’விஸ்வாசம்’: இயக்குநர் வெங்கட்பிரபு வேண்டுகோள்


venkatprabhu-tweet-about-petta-and-viswasam

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 11:24 am
  • அ+ அ-

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' வசூல் மோதல் தொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆனால், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி படக்குழுவினரும் போட்டியிட்டு எங்களது படம் தான் அதிக வசூல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனால், இணையத்தில் இரண்டு தரப்பு ரசிகர்களுமே ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி ட்வீட் போட்டு வருகிறார்கள். இது தமிழ்த் திரையுலகினர் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இது பேட்ட vs விஸ்வாசம் அல்ல... ’பேட்ட’யும் ‘விஸ்வாசமும்’. தல ரசிகர்களும் தலைவர் ரசிகர்களும் தயவு செய்து இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள். இவற்றை ஒப்பிடுவதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது. இரண்டு படங்களும் இந்த வருடத்தின் சிறந்த ஆரம்பம். ‘பேட்ட’ மற்றும் ’விஸ்வாசம்’ குழுவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. மேலும், அஜித்துக்கு நெருங்கிய நண்பராக வலம் வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close