[X] Close

அனைத்து வசூல் ரெக்கார்டுகளையும் 'பேட்ட' உடைக்கும்: விநியோகஸ்தர் தகவல்


distributor-promises-petta-record

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 19:47 pm
  • அ+ அ-

அனைத்து வசூல் ரெக்கார்டுகளையும் உடைக்கும் 'பேட்ட' என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் 'பேட்ட'. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தக்கி, சசிகுமார் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

தமிழக விநியோகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 'பேட்ட' படத்தை வெளியிட்டுள்ளது ரெட் ஜெயன்ட் மூவிஸ். 'விஸ்வாசம்' படத்துடன் வெளியானதால், எது வசூல் அதிகம் என்று கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் முதன் முறையாக 'பேட்ட' படத்தின் வெற்றி குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் செண்பகமூர்த்தி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

6 வருடங்களாக பல படங்கள் வசூலில் ஏற்றம், இறக்கமாக இருக்கலாம். 'பேட்ட' படத்தின் வசூல் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைக்கும். ஏனென்றால் அனைத்து தரப்பு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது. ஒன்றுமே குறையில்லை. ஆனால், இறுதியில் ரஜினி சார் படம் தான் நிக்கும். எங்களுடைய படங்கள் வெளியீட்டு வசூலில் 'பேட்ட' தான் நம்பர் ஓன். 

1990-களில் ரஜினி சார் படத்தை எப்படி பார்த்தார்களோ, அப்படி பார்த்து வருகிறார்கள். ரஜினி சார் ஸ்டைல், அனிருத் பாடல் என மக்கள் ரசித்து வருகிறார்கள். படத்துக்கு வரும் அனைவருமே குடும்பமாக 10 டிக்கெட், 15 டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள். 

இவ்வாறு செண்கபமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close