[X] Close

'ஆளப்போறான் தமிழன்' பாடல் சாதனையை முறியடித்த 'ரவுடி பேபி' பாடல்


rowdy-baby-breaks-new-record

  • kamadenu
  • Posted: 19 Jan, 2019 19:39 pm
  • அ+ அ-

அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது என்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் செய்த சாதனையை முறியடித்துள்ளது 'ரவுடி பேபி' பாடல்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. யுவன் இசையமைப்பில் வெளியான இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அப்படம் வெளியான சில நாட்களிலேயே, 'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை யூ-டியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். இப்பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், பில்போர்ட் இசைப் பட்டியலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியலாகும். 

பில்போர்ட் இசைப் பட்டியலில் இடம்பெற்றதால் பெரும் மகிழ்ச்சியடைந்தது படக்குழு. தற்போது அவர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது 'ரவுடி பேபி' பாடல்.

தமிழ் சினிமாவில் அதிகப் பார்வையாளர்கள் கொண்ட பாடல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருந்தது 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல். இதுவரை 9.1 மில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது. இச்சாதனையை 'ரவுடி பேபி' பாடல் முறியடித்துள்ளது. தற்போது வரை 9.7 மில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முதல் 10 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல் வீடியோ என்ற சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளது 'ரவுடி பேபி' பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தனுஷ் நடிப்பில் உருவான ’வை திஸ் கொலவெறிடி’ பாடலின் மேக்கிங் வீடியோ 17.3 கோடி பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close