[X] Close

‘இந்தியன் 2’ படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்


ar-rahman-praises-indian-2-movie-team

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 19 Jan, 2019 14:54 pm
  • அ+ அ-

‘இந்தியன் 2’ படக்குழுவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம்.
 
தற்போது 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 18) தொடங்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இந்தியன் 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், நேற்று படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

இப்படத்துக்காக, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

இந்நிலையில், படக்குழுவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஷங்கர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீ ட்வீட் செய்துள்ள அவர், ‘உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் இன்னொரு மிகப்பெரிய வெற்றிப் படத்துக்கான வாழ்த்துகள். குட் லட் நண்பா’ என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியன்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close