[X] Close

சிம்பு ரசிகராக அறிமுகமாகும் மகத்


mahat-movie-fl

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 18:55 pm
  • அ+ அ-

'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் மகத். இதில் சிம்பு ரசிகராக நடித்து வருகிறார்.

'மங்காத்தா', 'ஜில்லா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மகத். தனி நாயகனாக எந்தவொரு படத்திலுமே அவர் நடிக்கவில்லை.

'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் இடம்பெற்றதன் மூலம், அவருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவுக்கு நெருங்கிய நண்பராக வலம் வரும் மகத், தற்போது நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிரபு ராம்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மகத்துக்கு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குனர் பிரபு ராம் சி “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். சிம்புவின் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை வைக்கவில்லை. இப்படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம்” என்று தெரிவித்துள்ளார்.

தரண் இசையமைத்துள்ள இப்படத்துக்கு என்னியன் ஜெ ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close