[X] Close

’என் தலைவனை திரும்ப கொடுத்துட்டியே’: 'பேட்ட' இயக்குநரின் காலில் விழுந்த ரஜினி ரசிகர்


rajini-fan-reaction

வெற்றி திரையரங்கில் 'பேட்ட' படக்குழு

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 20:50 pm
  • அ+ அ-

என் தலைவனை திரும்ப கொடுத்துட்டியே என்று 'பேட்ட' இயக்குநரான கார்த்திக் சுப்பராஜின் காலில் விழுந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்ததுக்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சென்னையில் உள்ள திரையரங்குகளில், மக்களிடம் இருக்கும் வரவேற்பை நேரில் கண்டு வருகிறார்.

இந்நிகழ்வில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்குக்கு விஜயம் செய்தார். அப்போது திரையரங்கு உரிமையாளர் ராகேஷ் அவரை வரவேற்றார். அங்கு படம் பார்த்த ரசிகர்கள் அனைவருமே கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது 55 வயதுடைய ஒருவர் யாருமே எதிர்பாராத வகையில் கார்த்திக் சுப்பராஜின் காலில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் சுப்பராஜ் "என்ன அண்ணா இப்படியெல்லாம்" என்று உடனே அவரை எழுப்பினார்.

அந்த நபர் "என் தலைவனை நீ திரும்ப கொடுத்துட்டியே" என்று தன் மகிழ்ச்சியை கார்த்திக் சுப்பராஜிடம் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வினை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 17-ம் தேதி வரை 'பேட்ட' படத்தின் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close