[X] Close

’பேட்ட’ ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்: இயக்குநர் வினீத் சீனிவாசன் புகழாரம்


vineeth-about-petta

  • kamadenu
  • Posted: 12 Jan, 2019 20:45 pm
  • அ+ அ-

’பேட்ட’ ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான வினீத் சீனிவாசன் புகழாரம் சூட்டியுள்ளார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்ததுக்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நகரப் பகுதிகளிலும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலைக் குவித்து வருகிறது 'பேட்ட'.

இப்படம் தொடர்பாக மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநரும், நடிகருமான வினீத் சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நீண்ட நாட்களுக்குப் பிறகு 'பேட்ட' தான் ரஜினிகாந்தின் தி பெஸ்ட் படம். வெகுநாட்களுக்குப் பின் தியேட்டரில் கத்தி கூச்சலிட்டு கைதட்டி ரசித்தேன். கார்த்திக்... சூப்பர்ஸ்டாரை திரைக்கு திரும்பக் கொண்டுவந்ததற்காக நன்றி. இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.

இவ்வாறு வினீத் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close