[X] Close

உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைச்சார் கார்த்திக் சுப்பராஜ்; ரஜினி மகிழ்ச்சி


petta-rajini-karthik-subbaraj

ரஜினியுடன் கார்த்திக் சுப்பராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jan, 2019 19:42 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பேட்ட வெற்றிக்கு கார்த்திக் சுப்பராஜூம் அவரோட டீமும்தான் காரணம். ரசிகர்களுக்கு நன்றி என்று ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் நேற்று 10ம் தேதி ரிலீசானது. உலகெங்கும் ரிலீசான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்ட படத்தின் மூலம் பழைய எனர்ஜி ரஜினியைப் பார்க்கிறோம் என சமூக வலைதளங்களில் படம் குறித்தும் ரஜினி பற்றியும் பாஸிட்டீவ் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற ரஜினி, நேற்று அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்தார்.

அப்போது ரஜினி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பேட்ட பிடித்திருக்கிறது என்பதை அறிகிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மகிழ்ச்சியா இருக்கு. இந்த வெற்றிக்கு, சன் பிக்சர்ஸும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் அவரோட குழுவினரும்தான் காரணம். அவங்க எல்லாருக்கும் நன்றி.

பழைய ரஜினியைப் பார்த்ததா எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு முழுக்க முழுக்க கார்த்திக் சுப்பராஜ்தான் காரணம். அவர்தான் என்னை அப்படி மாத்தினார். ஒவ்வொரு காட்சியையும் எடுக்கும்போது என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்கவைச்சார். இந்தப் பெருமை எல்லாமே டைரக்டருக்குத்தான் போய்ச் சேரும்.

ரசிகர்களும் மக்களும்  பேட்ட பாத்துட்டு சந்தோஷப்படுறாங்க. இந்த சந்தோஷம்தான் எனக்குக் கிடைச்ச சந்தோஷம். மகிழ்ச்சியா இருக்கு.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close