[X] Close

தமிழில் வெளியாகும் பிரசாந்தின் தெலுங்குப் படம்


vinaya-vidheya-rama-dubbed-in-tamil

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 11 Jan, 2019 16:41 pm
  • அ+ அ-

பிரசாந்த் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘வினய விதேய ராமா’, தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

போயபட்டி சீனு இயக்கத்தில் இன்று (ஜனவரி 11) ரிலீஸாகியுள்ள தெலுங்குப் படம் ‘வினய விதேய ராமா'. ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். பிரசாந்த், ஆர்யன் ராஜேஷ், சினேகா, மதுமிதா, ரவிவர்மா, ஹரிஷ் உத்தமன், மகேஷ் மஞ்ச்ரேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை மட்டும் படமாக்க 11 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். கனல் கண்ணன், இந்த சண்டைப் பயிற்சியை வடிவமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது.

‘வினய விதேய ராமா’, பிரசாந்துக்கு 50-வது படமாகும். 49 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரசாந்த், 50-வது படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில், அவர் ஹீரோவாக நடித்த ‘ஜானி’ படம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close