[X] Close

100 நாட்களைக் கடந்த ‘96’


96-film-crossed-100-days

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 11 Jan, 2019 15:55 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படம், 100 நாட்களைக் கடந்துள்ளது.

ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், த்ரிஷாவின் இளவயது கதாபாத்திரத்தில் கெளரியும் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தப் படத்தில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார், பயங்கரமாக ரீச் ஆனது. இதேபோன்ற சுடிதார் கடைகளிலும் உடனடியாக விற்பனைக்கு வந்தது.

கடந்த வருடம் (2018) அக்டோபர் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்நிலையில், படம் ரிலீஸாகி 100 நாட்கள் கடந்துவிட்டன. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி, கடந்த தீபாவளிக்கே இதனை ஒளிபரப்பியது.

இருந்தாலும், இன்னும் மாயா ஜால் திரையரங்கில் ஒரு காட்சி திரையிடப்படுகிறது. அனைவரின் பள்ளிக்காலக் காதல் நினைவுகளைக் கிளறிவிட்ட இந்தப் படம், காலம் கடந்தும் கொண்டாடப்படும் காதல் படமாகத் திகழும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close