விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு


‘குரங்கு பொம்மை’ நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம், ‘மகாராஜா’. அவரின் 50-வது படமான இதற்கு அனிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி உட்பட பலர் நடித்துள்ள இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதன் ரிலீஸ் தள்ளிப்போனதால் மகாராஜா அந்த தேதியில் வெளியாகிறது.