[X] Close

'பேட்ட' படம் குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து


petta-celebrity-tweets

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 19:19 pm
  • அ+ அ-

பேட்ட பராக்.. பேட்ட பராக் என்று ஒவ்வொரு நாளும் ரஜினி ரசிகர்கள் கவுன்ட்டவுன் வைத்து காத்திருந்த நிலையில், எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றாமல் ரஜினி ரசிகர்களை திகட்ட திகட்ட ஸ்வீட் சாப்பிட வைத்திருக்கிறது படம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட இன்று (ஜனவரி 10) படம் ரிலீஸ் ஆனது.
படம் குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தனுஷ்:
"பேட்ட ஒரு இதிகாசம்.  சூப்பர்ஸ்டார்... லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய நன்றி. நாங்கள் நிச்சயம் ரஜினிஃபைட் ஆனோம். அனிருத்தின் பின்னணி இசை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பு. பேட்ட பராக்..."

சிவகார்த்திகேயன்: தலைவர் மாஸ் மோட். உற்சாகமான, ஸ்டைலான ரஜினிகாந்த் திரையில் மின்னுகிறார். அனிருத் சாரின் பின்னணி இசை வேற லெவல்.  படம் முழுக்க முழுக்க தலைவர் களம். கார்த்திக் சுப்புராஜூக்கும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.  

ஹரிஷ் கல்யாண்: பேட்ட சிறப்பான தரமான சம்பவம். தலைவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அதே ஸ்டைல். அதே கெத்து. பேட்ட பராக் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.  

தயாநிதி அழகிரி: பேட்ட ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியைத் தந்திருக்கு. இன்னிக்கு ராத்திரி ஷோவும் பார்க்கப்போகிறேன். இந்தப் படத்தை எவ்வளவு ரசித்தேன் என்பதை இந்த ஒரு ட்வீட்டில் சொல்லிவிட முடியாது. இன்னும் எத்தனை ட்வீட் போட்டாலும்கூட சொல்லிவிட முடியாது. 

தனஞ்ஜெயன்: பேட்ட தலைவர் ரஜினிகாந்தி சாரின் ஷோ. முழுக்க முழுக்க அவரின் ஷோ இது. மொத்த உற்சாகத்துடன் திரும்பி வந்துவிட்டார் ரஜினி. அவரை அவராகவே பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. சிறப்பான வேலை கார்த்திக் சுப்புராஜ். கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திரையில் அவை படைக்கப்பட்ட விதமும் சிறப்பு. சூப்பர் பொங்கல் ட்ரீட்.
 
வைபவ்:  வயசெல்லாம் வெறும் நம்பர்தான்...  ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்..... மாஸ்..  உண்மையான ரஜினிஃபைடு தருணம். கார்த்திக் சுப்புராஜ் பிண்ணீட்டீங்க ப்ரோ.. தலைவணங்குகிறேன். அனிருந்த் இசை மரண மாஸ்.  

லட்சுமி ப்ரியா: கடவுளே! நான் ஆனந்தக் கண்ணீர் சிந்தப்போகிறேன் என நினைக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ்.. இப்படியும் ஒரு அறிவுஜீவியா நீ. உண்மையான ரஜினி படத்தை கொடுத்தமைக்காக நன்றி. தலைவர் படம்டா போய் பாருங்கடா என்று பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் திருப்தியடையச் செய்துவிட்டீர்கள். முடியல. மெய்சிலிர்த்துவிட்டது.

லிங்குசாமி: முழுசா ரசித்துப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு படம். நிச்சயமாக ரஜினிஃபைட் ஆவீர்கள். கார்த்திக் சுப்புராஜை நினைத்து மகிழ்கிறேன். த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், அனிருத் எல்லோருக்குமே நன்றி.

ஏ.ஆர்.முருகதாஸ்: ரஜினிகாந்த் செம்ம மாஸ். செம்ம எனர்ஜி. அவர்தான் மாஸ்டர் ஆஃப் மாஸ். வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ். அனிருத்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close