ஐரோப்பாவில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா


நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு பிரிந்தனர். இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாகக் களமிறங்கினர். இதற்கிடையே, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. சோபிதா, தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்திருந்தார். இருவரும் லண்டனில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் கசிந்தன. ஆனால், அது பற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது இருவரும் ஐரோப்பாவுக்குச் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனால் அவர்கள் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.