பிரதமராகும் மோடிக்கு நடிகர் ரஜினி வாழ்த்து


சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம்சென்னைக்கு நேற்று மாலை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள எனது அருமை நண்பர்கள் மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபுவுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்தியில் என்டிஏ ஆட்சி அமைக்க இருக்கிறது. 3-வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு கூறினார்.