[X] Close

'இந்தியன் 2' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் பே சூஸி?


indian2

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 19:48 pm
  • அ+ அ-

'இந்தியன் 2' படத்தில் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

'2.0' படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இப்படத்துக்கான உடல் குறைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். அவரோடு காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்துக்காக வர்மக் கலைகளையும் கற்று வருகிறார்.

'இந்தியன்' படத்தின் இறுதிக்காட்சி வெளிநாட்டில் முடிவடையும். அதன் இரண்டாம் பாகம் என்பதால் தைவானில் கதை தொடங்கி இந்தியாவுக்கு வருவது போன்று திரைக்கதை வடிவம் கொடுத்துள்ளார் ஷங்கர்.

இதில் தைவானில் உள்ள காட்சிகளில் கமலுடன் நடிக்க பே சூஸி என்ற தென்கொரிய நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் ஜனவரி 21-ம் தேதி 'இந்தியன் 2' படப்பிடிப்பை சென்னையில் தொடங்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. அன்றைய தினமே பிரம்மாண்ட பூஜையுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close