[X] Close

மணிரத்னம் படத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்?


amitabh-bachchan-and-aishwarya-rai-play-in-maniratnam-movie

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 04 Jan, 2019 12:38 pm
  • அ+ அ-

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்தனர்.

இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது, விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிக்கிறார் மணிரத்னம். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற ஆப்ஷனையும் வைத்திருக்கிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’, ‘குரு’ மற்றும் ‘ராவணன்’ ஆகிய படங்களில் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close