[X] Close

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் தனுஷ்


sathyajyothi-films-dhanush

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Jan, 2019 21:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ். துரை செந்தில்குமார், ராட்சசன் இயக்குநர் ராம்குமார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.

விவேகம்  படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ், அதையடுத்து அந்த நிறுவனத்துக்கே மீண்டும் படம் செய்வதாகச் சொன்ன அஜித், அதன்படி நடித்தும் கொடுத்தார். அதுவே விஸ்வாசம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் விவேகம் தோல்வியைத் தழுவியது. மூன்று படங்களையும் இயக்கிய சிவாவுக்கே மீண்டும் விஸ்வாசம் படத்தின் வாய்ப்பை வழங்கினார் அஜித்.

தற்போது படம் முடிவடைந்து, பொங்கல் வெளியீடாக வருகிற 10ம் தேதி அன்று ரிலீசாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் இரண்டு படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் 34 படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இதன் பிறகு தனுஷ் 35வது படத்தின் வேலைகள் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். சமீபத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற ராட்சசன் படத்தின் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close