[X] Close

சைவத்துக்கு மாறிய யோகி பாபு


yogi-babu-turns-vegetarian

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 01 Jan, 2019 15:14 pm
  • அ+ அ-

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படத்தை இயக்கியுள்ள முத்துக்குமரன், ‘தர்மபிரபு’ படத்தை இயக்கி வருகிறார். இதில், எமன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க, சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார்.

யோகிபாபுவும் படக்குழுவினரும், படப்பிடிப்பு முடியும்வரை ஆன்மிகத்துக்கு மாறியுள்ளனர். ‘தர்மபிரபு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் யோகி பாபு, தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை நடத்தினர். அதைத் தொடர்ந்து வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். 

மேலும், எமதர்ம ராஜாவின் தெய்வீகத்தன்மையை உறுதிப்படுத்த, படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும் பரிமாறவும் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இந்த ஆன்மிகச் செயல்முறை, படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகின்றனர். 

இப்படத்துக்காக ரூ. 2 கோடி செலவில் பிரமாண்டமான எமலோகத்தளம் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ளது.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி போடுகின்றனர். இதில் யார் எமன் பதவியைத் தட்டிச்செல்லப் போகிறார், தன் தகுதியை எப்படி நிரூபிக்கின்றனர் என்பதே ‘தர்மபிரபு’ படத்தின் கதை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close