[X] Close

என் கதைல நான் வில்லன்டா; ஒத்தைக்கு ஒத்தை வாடா! - பரபர படபட விஸ்வாசம் ட்ரெய்லர்


viswasam-trailor-ajith

விஸ்வாசம் - தூக்குதுரை அஜித்

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Dec, 2018 14:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர், சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ‘என் கதைல நான் வில்லண்டா’ என்று அஜித் சொல்லும் வசனம், தெறிக்கவிட்டிருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக, அதற்கு முன்னதாகவே, ஜனவரி 10ம் தேதி அன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

‘வாழ்க்கைல ஒரு தடவை, அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவை, சிரிக்காத ஏழையும் இல்ல’ என்கிற வசனத்துடன் தொடங்குகிறது விஸ்வாசம் ட்ரெய்லர்.

’இங்கிட்டு இருக்கிற அத்தனை பேருக்காகவும் வக்காலத்து வாங்கிட்டுப் போய் சண்டை போட்டுட்டு வந்திருக்காப்ல. சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் கிடைக்காமலா போயிரும்!’ என்று ரோபோ சங்கரின் குரலில் வசனம்.

மீசை முறுக்கும் குளோசப். நுனி வேஷ்டியை பிடித்துக்கொண்டு நடக்கிற குளோசப். கூலிங்க்ளாஸை அணிந்துகொள்கிற குளோசப். ‘பங்காளிகளா... அடிச்சித் தூக்கிடலாமா?’ என்று எண்ட்ரி கொடுக்கிறார் அஜித்.

அடுத்தடுத்த அதிரிபுதிரியான சண்டைக் காட்சிகள்.

வயல்வெளியில், கொசுவம் வைத்த புடவை கட்டிக்கொண்டு நம்ம நயனா இது? என்று அழகேறி வருகிறார். அடுத்து... ‘நீங்க பேரழகு’ என்கிறார் அஜித்.

என்னது என அதிர்கிறார். ‘நேம் பியூட்டி’ என்று இங்கிலீஷில் ஜொள்ள, ‘ம்ஹூம்... இவரு பொங்கவைச்சிருவாரு போல இருக்கே...’ என்று யோகி பாபு கமெண்ட் கொடுக்கிறார்.

அடுத்து... ‘இஞ்சார்றா...’ என்கிற மதுரைத் தமிழ். வயல்வெளி, இயற்கை சூழ் வீடு, கலப்பை தூக்கிய தூக்குதுரை அஜித், பைக்கில் வந்து ஃபைட், கிராமத்து ஏரியாவில் சண்டை, முளைப்பாரி காட்சி, திருவிழாக் கொண்டாட்டம், பைக் ஸ்டேண்ட் குளோசப். சட்டையை மடிக்கும் குளோசப்.

‘நம்பர் ஒன் தான் என் அடையாளம். என் கதைல நாந்தாண்டா ஹீரோ’ என்கிறார் வில்லன்.

இன்னொரு காட்சியில் சிரித்துக்கொண்டே, மீசை வருடியபடி, முறுக்கிவிட்டபடி, ‘என் கதைல நாந்தாண்டா வில்லன் என்கிறார் ஹீரோ அஜித்.

’உங்க மேல கொலக் கோபம் வரணும். ஆனா உங்களை எனக்குப் புடிச்சிருக்கு சார்’ என்கிறார் அஜித்.

‘லாங்லிவ்வு. ஹேப்பி லைஃப்பு’ என்று பட்டையைக் கிளப்புகிறார் அஜித்.

‘நான் நெனச்சா இந்த ஏரியாவையே வாங்கிருவேன்’ என்று வில்லன் சொல்ல, ‘ஏறி மிதிச்சேன்னா, ஏரியாவை இல்லை, மூச்சைக் கூட வாங்கமுடியாது’ என்று மிரட்டி தெறிக்கவிடுகிறார் தூக்குதுரை.

‘பேரு தூக்குதுரை. தேனி மாவட்டம். ஊரு கொடுவிலார்பட்டி. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா. பொண்ணு பேரு ஸ்வேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா’ என்று என்று காரை ஓட்டியபடி, மீசையை முறுக்கிக்கொண்டே சொல்கிறார் தூக்குதுரை அஜித்.

பொங்கல்... தல ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்தான் போல!

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close