[X] Close

ஒரு நாள் அரசியலுக்கு வருவேன்!- ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சூசகம்


actor-angelina-jolie-hints-at-move-into-politics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Dec, 2018 12:04 pm
  • அ+ அ-

நம்மூரில் நாலு படம் ஓடிவிட்டாலே நேரடியாக அடுத்த மூவ் அரசியல்தான். ஆனால், ஹாலிவுட்டில் அப்படியல்ல சொற்ப அளவிலேயே நடிகர்கள் அரசியலுக்கு வருவது நிகழ்கிறது.

அந்த வரிசையில் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். ஏஞ்சலினா ஹாலிவுட் ஸ்டார் மட்டுமல்ல ஐ.நா.வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பின் தூதுவராக இருக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

பிபிசி செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அவர் ஒரு பேட்டி அளித்தார். அதில் நிருபர் அவரிடம் அரசியலில் ஈடுபடுவீர்களா எனக் கேட்க, "இதை என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கேட்டிருந்தீர்கள் என்றால் சிரிப்புதான் பதிலாக இருந்திருக்கும். நான் அரசியலுக்கு தகுதியானவர்தானா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அரசியல் எண்ணமே இல்லை என்று சொல்ல முடியாது. நான் செய்யும் ஒரு விஷயத்தால் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்றால் அதை நேர்மையாகச் செய்வேன்.

இப்போதைக்கு ஐ.நா. அமைப்புடன் வேலை செய்கிறேன். தேவையில் இருக்கும் மக்களுக்ககா நேரடியாக களப் பணியாற்றுகிறேன். அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறேன். ஏன் சில நேரங்களில் ராணுவத்தினருடனும் செயல்படுகிறேன். அதனால், எந்த ஒரு பதவி பொறுப்பும் இல்லாமலேயே மக்கள் சேவை செய்யும் இடத்தில் தோதாக அமர்த்தப்பட்டிருக்கிறேன். எனக்கென ஓர் அரசியல் கொள்கை வைத்து செயல்படாமலேயே சேவை செய்கிறேன். இப்போதைக்கு இதையே அமைதியாக செய்வேன்" எனக் கூறியுள்ளார்.

அரசியலில் எதிர்காலத்தில் ஈடுபடுவதை அவர் சூசகமாக சொல்லியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close