[X] Close

பூட்டு போட்ட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டம்


suresh-kamatchi-about-council-decision

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 18:08 pm
  • அ+ அ-

பூட்டு போட்ட விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டமாக பதிலளித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பூட்டு, விஷால் மீது வழக்குப்பதிவு என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக விவாதிக்க நேற்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவினர் கூடி விவாதித்தார்கள்.

செயற்குழு முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, "தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பது தொடர்பாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எங்களுக்கு எதுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்?? நாங்க ஆயிரம் முறை போராடிக் கேட்ட கேள்விகளுக்கு முதலில் விளக்கம் நீங்க சொல்லுங்க பதவி ஆசை கொண்டவர்களே! சேவை செய்றேன்னு சொல்லிட்டு வந்தவர்களின் நிஜ முகம் அராஜகம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் மக்களே! 

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close