இந்தியா முழுவதும் செல்கிறது ‘கல்கி 2898 ஏடி’ எதிர்கால வாகனம்


ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிவியல் புனைவு படமான இது வரும் 27-ல் வெளியாகிறது. இதில் பிரபாஸ், பைரவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவரின் நண்பராக புஜ்ஜி என்ற கார் வருகிறது.

எதிர்கால வாகனமாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த 6 டன் கார், ரசிகர்கள் முன்னிலையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம் இப்போது மும்பை, டெல்லி உட்பட பல முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே, படத்துக்கு முன்னோட்டமாக ‘பைரவா அண்ட் புஜ்ஜி’ என்ற அனிமேஷன் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. 14 நிமிடம் ஓடும் 2 எபிசோடு கொண்ட இத்தொடர் மே 31-ல் பிரைம் வீடியோவில் வெளியாகின.