[X] Close

கெளதம் மேனனுக்குப் பதில் துணைத் தலைவராக பார்த்திபன் தேர்வு: தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் முடிவு


parthiban-replaced-for-gautham-menon

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 24 Dec, 2018 21:24 pm
  • அ+ அ-

தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவராக இருந்த கெளதம் மேனனுக்குப் பதில், பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பூட்டு, விஷால் மீது வழக்குப்பதிவு என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூடியது.

செயற்குழுவுக்குப் பின் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இதனால், டிக்கெட் விலை குறையும். எனவே, திரையரங்குகளுக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள். இது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது.

பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் இளையராஜா நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அவரைச் சந்திப்போம்.

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது குறித்து அடுத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

தற்போது துணைத்தலைவராக இருக்கும் கெளதம் மேனனுக்குப் பதில் பார்த்திபன் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close