[X] Close

யோகி பாபுவின் அடுத்த அவதாரம்


yogi-babu-turn-dialogue-writer

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 24 Dec, 2018 19:45 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம்வந்து கொண்டிருக்கிறார் யோகி பாபு. கடந்த தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள இவர், வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடனும் நடித்துள்ளார்.

‘ஐரா’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘சதுரங்க வேட்டை 2’ என இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. ‘கூர்கா’, ‘ஜோம்பி’, ‘தர்மபிரபு’ என 3 படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்நிலையில், ‘தர்மபிரபு’ படத்துக்கான வசனத்தையும் எழுதியுள்ளார் யோகி பாபு. விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படத்தை இயக்கியுள்ள முத்துக்குமரன், ‘தர்மபிரபு’ படத்தை இயக்குகிறார். இதில், எமன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க, சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி போடுகின்றனர். இதில் யார் எமன் பதவியைத் தட்டிச்செல்லப் போகிறார், தன் தகுதியை எப்படி நிரூபிக்கின்றனர் என்பதே ‘தர்மபிரபு’ படத்தின் கதை.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close