[X] Close

'ஜீரோ' ஷாருக்கும், 'அப்பு' கமலும்: விஜய் மில்டன் கிண்டல்


vijay-milton-tweets

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:00 pm
  • அ+ அ-

'ஜீரோ' படம் பார்த்துவிட்டு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

ஆனந்த் எல்.ராஜ் இயக்கத்தில் ஷாருக்கான், அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜீரோ'. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்த படம் இது. மேலும் சல்மான்கான், கஜோல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருமே சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படத்தில் குள்ளமான மனிதராக ஷாருக்கான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், "நம்ம கமல் சார் எவ்வளவு பெரிய ஹீரோன்னு காட்டுறதுக்கு வந்துருக்கு ஜீரோ" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் கமல் மற்றும் பி.சி.ஸ்ரீராம் இருவரது ட்விட்டர் கணக்குகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏனென்றால், 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் குள்ளமான மனிதராக நடித்துள்ளார். இதற்கு பி.சி.ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். இதில் எப்படி கமல் குள்ளமான மனிதராக நடித்தார் என்ற ரகசியத்தை இதுவரை படக்குழுவினரோ, அதில் பணிபுரிந்தவர்களோ கூறவில்லை. சில காட்சிகள் மட்டுமே காலை மடக்கி நடித்தே என்று கமல் சில பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படம் இந்தியில் 'அப்பு ராஜா' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் பெரும் பெற்றது. இதைக் குறிப்பிடும் விதமாக விஜய் மில்டன் கிண்டல் செய்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close