[X] Close

ரஜினியின் வசனத்தைப் பேச மறுத்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்


vijay-sethupathi-explain-about-rajini-dialogue

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 17 Dec, 2018 17:54 pm
  • அ+ அ-

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட படக்குழுவிடம், ரஜினி படங்களில் பேசிய வசனம் எதையாவது பேசும்படி கேட்கப்பட்டது.

பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக் உள்பட அனைவரும் தங்களுக்குப் பிடித்த வசனங்களைப் பேச, விஜய் சேதுபதி மட்டும் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் நிருபர் கேட்ட கேள்விக்கு, “எனக்கு வராததை நான் எப்படிச் செய்ய முடியும்? கூத்துப்பட்டறைக்கு நான் முதன்முதலில் சென்றபோது, ஒருவர் என்னை மிமிக்ரி முயற்சிக்கச் சொன்னார். 

நடிக்க விரும்பும் எல்லாரும் ரஜினிகாந்த் போல நடித்துக் காட்டுவார்கள். அதுகூட எனக்கு வராது என்று நான் அவரிடம் சொன்னேன். அந்தக் காலகட்டத்தில் மன அழுத்தத்தில் இருந்தேன். சூப்பர் ஸ்டார் போல நடித்துக்காட்டக் கூட முடியவில்லையே... நான் என்றாவது நடிகனாவேனா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படம் வருகிற 20-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close