[X] Close

பணம் இல்லேன்னா பொணம்தான்! - இயக்குநர் சேரன் உருக்கம்


cheran

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 11:32 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

இங்கே பணம்தான் முக்கியம். பணம் மட்டும் இல்லேன்னா நாம பொணம்தான் என்று இயக்குநர் சேரன், மனமுருகிச் சொன்னார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் சேரன், திருமணம் - சில திருத்தங்களுடன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் அறிமுக விழாக் கூட்டம் நடைபெற்றது.

அதில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

நான்கு வருடங்களுக்குப் பிறகு திருமணம் - சில திருத்தங்களுடன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். ஆண்டவன் இந்தக் காலகட்டத்தில் நிறைய அனுபவங்களைக் கொடுத்தான். வெற்றி, தோல்வி, தடை, சிக்கல், பிரச்சினை, பணம், மனிதர்கள் என்று பல சோதனைகள் வரலாம். இதில் தேக்கம் அடைந்தது உண்மைதான். ஆனால் இது தேக்கமில்லை. புதியதொரு அனுபவம்.

ஈங்கே எதுவும் நிரந்தரமில்லை. எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும், நண்பர்கள், எதிரிகள் என்று மாறிக்கொண்டே இருப்பார்கள்.

இங்கே நமக்கு ஒரு பிரச்சினை, சிக்கல்னு வந்தா, நண்பர்கள், சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லாருமே விலகிப் போயிருவாங்க. இங்கே பணம்தான் முக்கியம். பணம் இல்லேன்னா பொணம்தான்.

இந்த சமயத்துலதான் ஒருநாள், என் பெரிய மகள் என்னிடம், ‘வெள்ளையப்பன் எனும் நண்பர் உங்களைப் பாக்கணும்னு ஆசைப்படுறாருப்பா’ என்றாள். அவர் வந்து சந்தித்தார்.

’நீங்க ஏன் படமே பண்ணலை?’ன்னு கேட்டார். சி2ஹெச், பிரச்சினை, பணம் லாஸ்னு விஷயங்களைச் சொன்னேன். நண்பர் ஒருத்தர், பிரேம்னு பேரு. உங்களை வைச்சு படம் பண்ண தயாரா இருக்கார். பண்றீங்களான்னு கேட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் படம்.

கதை, படம், பட்ஜெட்னு எதுவுமே கேக்கல. படம் பண்ணிட்டிருக்கும் போது ஒருநாள் வந்தாங்க. ‘உங்களோட பழைய பிரச்சினை என்ன சார்னு கேட்டாங்க. சொன்னேன். ‘அதையெல்லாம் நாங்க பாத்துக்கறோம். தீர்த்துடுறோம். அதை மைண்ட்ல வைச்சுக்காம, படத்துல பழையபடி கவனம் செலுத்தி பண்ணுங்க சார்’னு சொன்னாங்க.

தெய்வம் நேர்ல வராதுன்னு சொல்லுவாங்க. இப்படிப்பட்ட மனிதர்கள்தான் தெய்வங்கள்’’ என்று சொல்லும்போதே குரல் உடைந்து, அவர்களைப் பார்த்து கையெடுத்து வணங்கினார் இயக்குநர் சேரன்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close