[X] Close

அம்பானி வீட்டுத் திருமணத்தில் அமிதாப் உணவு பரிமாறியது ஏன்?- அபிஷேக் பச்சன் விளக்கம்; நெட்டிசன்கள் கண்டனம்


ambani-daughter-marriage-issue

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 11:30 am
  • அ+ அ-

அம்பானி வீட்டுத் திருமணத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் இருவரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியது குறித்து அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பணக்காரராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் விருந்து பரிமாறினர். நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், நடிகர்கள் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஆமிர் கான் உள்ளிட்டோர் உணவு வகைகளைப் பரிமாறினர்.

குறிப்பாக அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் இருவரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ இணையதளத்தில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இதைத் தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்துள்ளார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன். இதுதொடர்பாக ட்விட்டரில் விடுத்த கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ''இது 'சஜ்ஜன் காட்' என்னும் பாரம்பரியம். அதன்படி பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு உணவு பரிமாறுவர்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு நெட்டிசன்கள், எப்போது பணக்காரர்களுக்கு திரை நட்சத்திரங்கள் உறவினர் ஆனார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close