[X] Close

இளையராஜா சார் பாட்டுதான் எப்பவுமே! - மனம் திறந்த ஷங்கர்


ilayaraaja-shankar

ஷங்கர் - இளையராஜா

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 10:00 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

எப்போதும் இளையராஜா சார் பாடல்கள்தான் கேட்பேன் என்று மனம் திறந்தார் ஷங்கர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அவரிடம் ஸ்ருதிஹாசன் பல கேள்விகளைக் கேட்டார்.

சிறுவயதில் இருந்தே எந்த நடிகையை ரொம்பப் பிடிக்கும் என்று ஸ்ருதி கேட்டார். உடனே ஷங்கர், வைஜெயந்திமாலா என்று பதிலளித்தார்.

பிடித்த வசனம் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘முதல்வன் படத்தில் ‘கடைசியில என்னையும் அரசியல்வாதியாக்கிட்டியேடா’ என்ற வசனமும் இந்தியன் படத்தில் ’வெளிநாடுகள்ல கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம். ஆனா இங்கே கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்’ இந்த ரெண்டு டயலாக்கும் ரொம்பப் பிடிக்கும்’ என்றார் ஷங்கர்.

‘நீங்கள் எதற்கு அடிமை” என்று ஸ்ருதிஹாசன் கேட்டதும் சட்டென்று ‘ஒர்க்கிறகு அடிமை’ என்றார் ஷங்கர். எப்பவும் இளமையாய் இருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது, அதற்கு கிரியேட்டிவிட்டி என்று பதிலளித்தார்.

ஸ்ட்ரெஸ் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, வேலைல இன்னும் அதிகமா ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.

உங்கள் மனைவி உங்களை எப்படி நினைத்துக்கொள்வார் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ஸ்ருதி. அதற்கு ஷங்கர், ‘டிஸிப்ளின்’ என்று பதிலளித்தார். ‘இன்னும் டிஸிப்ளினாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.

அடிக்கடி கேட்கும் பாடல் என்ன என்று ஸ்ருதிஹாசன் கேட்டார். உடனே யோசிக்கவே யோசிக்காமல், எப்பவுமே இளையராஜாவின் எல்லாப் பாட்டுங்களுமே கேட்டுக்கிட்டிருப்பேன்’ என்று சொன்னார் ஷங்கர்.

ஜென்டில்மேன் தொடங்கி இதோ... இப்போது இந்தியன் 2 வரையிலான ஷங்கர் இயக்கிய எந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. மேலும் அவரின் எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எடுத்த படங்களுக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close