‘புஷ்பா 2’ படத்துடன் மோதும் கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’


நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள படம், 'ரகு தாத்தா'. சுமன் குமார் இயக்கியுள்ள இதில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘கயல்விழி’ என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யாமினி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஆக.15-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படமும் வெளியாக இருக்கிறது.