[X] Close

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம்: மோகன்லால் படம் சாதனை


odiyan-set-pre-business-record

ஓடியன் படத்தில் மோகன்லாலின் இரண்டு கெட்டப்புகள்

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 17:24 pm
  • அ+ அ-

மோகன்லால் நடிப்பில் டிசம்பர் 14 அன்று திரைக்கு வரவுள்ள 'ஓடியமன்' திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அறிமுகம் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில், மோகன்லால், பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கும் ஃபேண்டசி படம் 'ஓடியன்'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் படம் வெளியாகிறது. கோலிவுட் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக மலையாளத்தில் நுழைகிறார். படத்துக்கான பின்னணி இசையை மட்டும் சாம் கவனிக்கிறார். 

படத்தின் வெளிநாட்டு உரிமை, வெளிமாநில உரிமை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து கணக்குகளையும் சேர்த்து, படம் வெளியாகும் 3 நாட்களுக்கு முன்னரே ரூ.100 கோடி வசூலைப் பெற்றுவிட்டது என ஸ்ரீகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன், 'காயம்குளம் கொச்சுன்னி', 'புலி முருகன்' ஆகிய மலையாளப் படங்கள் 100 கோடி வசூலைக் கடந்ததிருந்தது. ஆனால் 'ஓடியன்', வெளியீட்டுக்கு முன்பே 100 கோடியைத் தொட்ட முதல் மலையாளப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. 

இந்தப் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து இளமையாக காட்சி தரும் மோகன்லாலின் தோற்றம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால் படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் மலையாள சினிமாவில் சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close