[X] Close

செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.இரஞ்சித்


nayanthara-ranjith

  • kamadenu
  • Posted: 11 Dec, 2018 11:27 am
  • அ+ அ-

செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி மற்றும் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிக்யூ இதழ் ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்குமிக்க இளம் இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் சினிமா, தொழில், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த 40 வயதுக்கு உட்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 2018-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் நடிகைகள் நயன்தாரா, பார்வதி மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்க இடத்தை மாற்றி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வெற்றிப் படங்களில் நடித்ததற்காக நயன்தாரா இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல ஸ்டீரியோடைப்களைத் தவிர்த்து திரைப்படங்களை இயக்குவதற்கும் தலித் மக்களின் வாழ்க்கையைப் பேசுவதற்காகவும் இயக்குநர் ரஞ்சித் தேர்வு செய்யப்பட்டதாக ஜிக்யூ தெரிவித்துள்ளது. அத்துடன் சாதிய எதிர்ப்பு இயக்கத்துக்காக ரஞ்சித் முன்னெடுக்கும் முயற்சிகளையும் ஜிக்யூ பாராட்டியுள்ளது.

அதேபோல மலையாளத் திரையுலகில் நிலவும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுக்கும் பார்வதியைத் தாங்கள் கவுரவிக்கிறோம் என்று ஜிக்யூ இதழ் தெரிவித்துள்ளது.

டாப்ஸி பன்னு, ஆலியா பட் மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close