[X] Close

சினிமா காட்சி ஊடகத்துக்கு மொழி அவசியமில்லை: மலையாள திரைப்பட இயக்குநர் ஜான் மேத்யூ கருத்து


john-mathew-speech-at-ooty-film-festival

உதகையில் குறும்பட விழாவை தொடங்கி வைத்து பேசிய மலையாள திரைப்பட இயக்குநர் ஜான் மேத்யூ.

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 10:50 am
  • அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் மூன்று நாள் தெற்காசிய குறும்பட விழா அசெம்பளி ரூம்ஸ் திரையங்கில் நேற்று தொடங்கியது.உதகை பிலிம் சொசைட்டி தலைவர் பால.நந்தகுமார் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது: ஒரு கலாச்சாரம் வாழ வேண்டும் என்றால் கலந்துரையாடல் இருக்க வேண்டும். சினிமா கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. அதன் அடிப்படையில் இந்த விழா நிறைய மொழி குறும்படங்களை திரையிடுகின்றனர். சினிமா உலகளாவிய மொழி. அனைவரும் புரிந்து கொள்கின்றனர். மொழி யற்ற, உணர்வுகள். ஒரு நல்ல சினிமா ஒரு நல்ல புத்தகத்தை படித்த தன்னிறைவை தருகிறது.

சினிமா சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் விரும்பு வதை மட்டுமே தராமல், உங்களின் உணர்வுகளை சினிமா மூலம் ரசிகர் களுக்கு அளிக்க வேண்டும். நல்ல சினிமாவை ரசிகர்கள் ஆதரிக்கின்ற னர். சமூகத்தில் நல்ல மதிப்பீடுகள் குறைந்து வருகின்றன. எனவே, சினிமா மூலம் நல்ல மதிப்பீடுகளை வளர்க்க வேண்டும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங் கேற்ற பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஜான் மேத்யூ பேசும் போது, ‘சினிமாத்துறை தொழில் முறை கலையாகும். தரமற்ற சினிமாவில் பணத்தை வீணாக்கக் கூடாது. குறும்படங்கள் தான் சினிமாவின் அடித்தளம். சினிமா காட்சி ஊடகம். எனவே, அதற்கு மொழி தேவையில்லை. மொழிகளை கடந்து ரசிகர்கள் உலகளவில் சினிமாவை ரசிக்கின்ற னர். மொழிக்கு அப்பாற்பட்டது சினிமா.

சினிமாவே மொழி தான். நல்ல சினிமா, விருதுகளை கடந்தது. உதகை சினிமா தொடங்க சிறந்த இடம். என்னுடைய அங்கிள் படம் உதகையில் மம்முட்டியை வைத்து தொடங்கினேன். விருது பெறுவது முக்கியமல்ல, சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். குறும்பட விழாவில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா, அஜயன் பாலா, கேபிள் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கு செயலாளர் டி.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close