[X] Close

கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறையில் விரும்பிய படங்களை திரையிட்டுக் கொள்ளலாம்: தயாரிப்பாளர்கள் சங்கம்


film-release

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 09:58 am
  • அ+ அ-

ஒவ்வொரு வாரமும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதிக்கும் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், அவ்வப்போது இந்த விதி காற்றில் பறக்கவிடப்படும்.

அதன்படி, வருகிற 20-ம் தேதி விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, 21-ம் தேதி தனுஷின் ‘மாரி’, ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என ஒரே வாரத்தில் 5 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

ஒரே வாரத்தில் 5 படங்களா? என ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளது தமிழ் சினிமா. இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக் குழு கடந்த 5-ம் தேதி கூடியது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 14-ம் தேதி நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ஒருசில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் நிறைய படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ம் தேதிகளில், தங்களது படங்கள் வெளிவர வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். அப்படி வெளிவந்தால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது என்று முடிவெடுத்து, அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதன் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறையில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள், வரும் வாரம் நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்துக்குப் பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close