[X] Close

கல்யாணம், குழந்தை, குடும்பம்னு ஜெயலலிதாவுக்கு ஆசை இருந்துச்சு – மனம் திறக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா


vennira-aadai-nirmala-jayalalitha

ஜெயலலிதா- வெண்ணிற ஆடை நிர்மலா

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 19:24 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கல்யாணம், குழந்தை, குடும்பம்னு ஜெயலலிதாவுக்கு ஆசைகள் இருந்துச்சு என்று நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மனம் திறந்து தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று (6.12.18). இதையொட்டி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஜெயலலிதா குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

வெண்ணிற ஆடை, எனக்கும் முதல் படம். அவருக்கும் முதல் படம். ஆனால் முதல் படம் என்பது மாதிரியில்லாமல், அவ்வளவு பிரமாதமாக நடித்திருப்பார் ஜெயலலிதா. ‘நீ என்பதென்ன’ என்ற பாடலுக்கு ஜெயலலிதாவின் நடனம், மிகப்பிரமாதமாக அமைந்திருக்கும்.

ஒருவகையில் அவரும் நானும் ஒரே மாதிரிதான். ரெண்டுபேருமே ரிசர்வ்டு டைப். அதிகம் யாருடனும் பேசிக்கொள்ளமாட்டோம். படப்பிடிப்பில் கிடைக்கிற நேரங்களில், புத்தகம் படித்துக்கொண்டே இருப்போம்.

கல்வி மீதும் பெரிய காதல் இருந்தது ஜெயலலிதாவுக்கு. நிறையப் படிக்கணும் என்பது அவரது ஆசை. ஆனால் சினிமாப் பக்கம் வந்துவிட்டார். காலம் வரவைத்துவிட்டது. மல்லிகைப்பூ என்றால் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப் பிரியம். அதேபோல ஸ்வீட் என்றால் அவ்வளவுதான். அப்படி ரசித்துச் சாப்பிடுவார். எனக்கும் ஸ்வீட் பிடிக்கும் என்பதால், ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டிருக்கிறோம்.

எதையும் வாயாய் வார்த்தையாய் சொல்லாமல், செயல்களாலேயே உணர்த்திவிடுபவர் ஜெயலலிதா. என் மீது கொண்ட அன்பையும் அப்படித்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல, நிறையப் படிக்கவேண்டும். கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். குழந்தை பெற்றுக்கொண்டு, குடும்பம் நடத்தி, சிறப்புற வாழவேண்டும் என்று ஜெயலலிதாவுக்குள் ஆசை இருந்ததை உணர்ந்துகொண்டேன்.

இதை நான் நேரடியாகக் கேட்டதில்லை. அவரும் வார்த்தையாகச் சொன்னதில்லை. அப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கலாம்.

இவ்வாறு வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close