[X] Close

“எனக்குப் பன்றிக் காய்ச்சல் இல்லை”: நடிகர் சரவணன் மறுப்பு


swine-flu-for-saravanan

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 17:26 pm
  • அ+ அ-

‘வைதேகி வந்தாச்சு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன். 25 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்த இவர், ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவரை ‘பருத்தி வீரன்’ சரவணன் என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், அவருக்குப் பன்றி காய்ச்சல் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் சரவணன்.

“நான் சேலத்தில் இருந்தபோது காய்ச்சல் அடித்தது. அங்கு சிகிச்சை எடுத்துவிட்டு சென்னை திரும்பினேன். சென்னைக்கு வந்தும் காய்ச்சல் குறையாததால், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், சாதாரண காய்ச்சல் தான் என்று சொல்லி மூன்றே நாட்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

வீட்டுக்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர், ஒரு படத்தில் நடித்தும் முடித்து விட்டேன். ஆனால், எனக்குப் பன்றிக் காய்ச்சல் என இன்னும் சிலர் போன் செய்து விசாரிக்கின்றனர். எனக்குப் பன்றிக் காய்ச்சல் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சரவணன்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close