[X] Close

ஜீவா படத்தை க்ளாப் அடித்துத் தொடங்கிவைத்த விஜய் சேதுபதி


vijay-sethupathi-helps-jiiva

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 17:23 pm
  • அ+ அ-

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கலகலப்பு 2’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படத்தில், ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரேசா உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கீ’, ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஜீவா. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘கீ’ படம், சிலபல பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸாகாமல் தவித்து வருகிறது. கலீஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

டான் சாண்டி இயக்கியுள்ள ‘கொரில்லா’ படத்தில், ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்பன்ஸி ஒன்றும் நடித்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கியுள்ள ராஜு முருகனின் மூன்றாவது படம் ‘ஜிப்ஸி’. நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஜீவா. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை, க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. ரத்னசிவாவும், விஜய் சேதுபதியும் நண்பர்கள் என்பதால், அவருக்காக இதைச் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close