[X] Close

‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் படத்தில் பாடிய விஜய் சேதுபதி


vijay-sethupathi-sings-again

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 17:15 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. காயத்ரி ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், மஹிமா நம்பியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார். முதலில் ‘மெல்லிசை’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘புரியாத புதிர்’ என்று மாற்றப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. ‘காளி’ படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்த ஷில்பா மஞ்சுநாத், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் மா.கா.பா. ஆனந்த், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.  ‘பிக் பாஸ்’ கொண்டாட்டம் நிகழ்ச்சியின் முடிவில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ட்விட்டரில் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தத் தகவலை புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பாடியிருக்கும் மூன்றாவது படம் இது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close