[X] Close

ஒருநாள் நீல நிறத் தோலுடன் திரையில் தோன்ற வேண்டும்!- தமன்னாவின் ஆசை


perhaps-the-next-thing-i-should-do-is-go-blue-that-s-one-skin-tone-that-i-haven-t-tried-before

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Dec, 2018 14:56 pm
  • அ+ அ-

ஒருநாள் நீல நிறத் தோலுடன் திரையில் தோன்ற வேண்டும். அதுதான் எனது ஆசை என நடிகை தமன்னா பாட்டியா கூறியுள்ளார்.

அண்மையில் அவரிடம் பேட்டி கண்ட செய்தியாளர் ஒருவர், "உங்களது நிறத்தைக் குறிப்பிட்டு பால் போன்ற வென்மை என்று உங்களை அடையாளப்படுத்தும்போது எனக்கே எரிச்சல் வரும் நீங்களும் அப்படி உணர்வதுண்டா?" எனக் கேள்வி எழுப்ப, "ஆம். நான் அதை வெறுக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நிறத்தோற்றம் கொண்டிருப்பதில் எனக்கு எந்த பெருமிதமும் இல்லை. நான் பிறவியிலேயே நல்ல தோற்றம் கொண்டிருப்பதற்காக எனது பெற்றோருக்கு நன்றி சொல்கிரேன். ஆனால், அது எனது கட்டுப்பாட்டால் நடந்தது இல்லை.

ஆனால், நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்னவோ நமது உடலும் மனமும். அதை நாம் எப்படி பேணுகிறோம் என்பதில்தான் நமது வலிமை இருக்கிறது.

பாகுபலிக்குப் பின்னர் என் மீதான அடையாளம் மாறியிருக்கிறது. எனது இயக்குநர்கள் எனது சரும நிறம் சற்றே டேன்ட் தோற்றம் பெற வேண்டும் என விரும்புகின்றனர். கேமராவில் பார்க்கையில் அது நன்றாக இருக்கிறது.

மேலும், பீரியட் படங்களுக்கு அந்த சரும பொலிவே ஒத்துவரும். எதிர்காலத்தில் இன்னும் சில படங்களுக்கும் இதே தோற்றத்தை பின்பற்றப்போகிறேன். அடுத்தமுறை முடிந்தால் நீல நிறமாகத் தோன்ற வேண்டும். இதுவரை அந்த ஸ்கின் டோனை நான் என் மீது பரிசோதித்தது இல்லை" எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close