சிங்கிள் ஹீரோயினாகவே நடித்து கமர்ஷியலாகவும் ஹிட்டடிக்கிற கலை நயன்தாராவைத் தவிர்த்து வேறு எந்த நடிகைக்கும் கைவரவில்லை. கதையைத் தேர்வு செய்யும்போதே படத்தில் உடன் நடிக்கும் நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என லிஸ்ட் போடுவதும் நயன்தாராதானாம். கண்டிஷனுக்கு ஓ.கே. சொன்ன பிறகு, ரூ.5, 6 கோடி சம்பளத்தையும் ஒரே தவணையாக கேட்கிறாராம் நயன்.
தொடர்ந்து நீங்க ஃபீல்டுல இருக்கணும்னு ஆசைப்படுறோம் மேடம்!
பெங்களூருவில் அரசுப் பள்ளியொன்றை தத்தெடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா. அதற்கு சில அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருப்பதோடு, அவ்வப்போது அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தன்னார்வலராக ஆங்கிலப் பாடமும் எடுத்து வருகிறார்.
தமிழ்த்திரை நாயக, நாயகிகளின் கனிவான கவனத்துக்கு..!
விக்ரம்பிரபு, லட்சுமிமேனனை ‘கும்கி’யில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரபுசாலமன், ‘கும்கி-2’வில் இயக்குநர் லிங்குசாமியின் உறவினர் மதியழகனை அறிமுகப்படுத்துகிறார். ஹீரோயின் ஆந்திராவைச் சேர்ந்த சித்தாராவ் என்கிற 19 வயது மாணவியாம்.
கதை ‘கும்கி’யா இருந்தாலும், நாயகி ‘குட்டிப்பொண்ணா’த்தான் இருக்கணும் போல!
‘சந்திரமௌலி’ படத்தில் பிகினியில் நடித்தும் பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை ரெஜினாவுக்கு. இப்போது, அரவிந்த்சாமி நடித்து வரும் ‘கள்ளபார்ட்’ படத்தில் ஐட்டம் டான்சராக ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். அஞ்சலி, ரம்யா நம்பீசன் போன்றவர்கள், கவர்ச்சியைக் காரணம் காட்டி ஒப்புக்கொள்ள மறுத்த வாய்ப்பு இது.
ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது!