இந்தப் படம் சினிமா அல்ல...  ஒரு வாழ்க்கை! - ‘பரியேறும் பெருமாள்’ நாயகி ஆனந்தி பேட்டி


ஹாசிகா, ரக்ஷிதா என்ற பெயர்களில் தெலுங்கில் நடித்துக்கொண்டிருந்த ஆனந்தி, இப்போது தமிழிலும் அசத்துகிறார். பிரபுசாலமனின் ‘கயல்' படத்தின் மூலம் தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்ட அவர், ஆங்கிலம் கலக்காத தமிழில் அழகாகப் பேசி அசத்துகிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்கும் அவரை ‘காமதேனு’ இதழுக்காக சந்தித்துப் பேசினேன்.

2013-ல், வெளியான ‘கிரீன் சிக்னலு’க்குப் பிறகு, நடித்த 12 படங்களுமே தமிழ்ப்படங்கள். தெலுங்குக்கு குட்பை சொல்லிவிட்டீர்களா?

அந்த நேரத்தில்தான் வெற்றிமாறன் சார் தயாரிப்பில் பொறியாளன், பிரபுசாலமன் சார் இயக்கத்தில் கயல் பட வாய்ப்பு கிடைத்தது. இரண்டு கதாபாத்திரங்களுமே பேசப்பட்டது. கூடவே, முகச்சாயலும் அசல் தமிழ்ப்பெண்ணைப் போலவே இருப்பதால், தமிழ் வாய்ப்புகளே அதிகம் வந்தன. நான் எதிர்ப்பார்க்கும்படியான கதாபாத்திரங்கள் தமிழில் கிடைப்பதால், தெலுங்கு வாய்ப்பைத் தேடும் அவசியம் ஏற்படவில்லை. அடுத்து, கிளாமராக நடிப்பது எனக்குப் பிடிக்காது. தமிழ் மக்களோடு இப்போது நல்லதொரு உறவு உருவாகியிருக்கு. அதைத் தக்கவைத்துக்கொள்வேன்.

திரையுலகில் லட்சியம், கனவு என்று ஏதாவது கோட்டை கட்டி வைத்திருக்கிறீர்களா?

x