பெரிய திரை இல்லாவிட்டால் சின்னத்திரை!


‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தும் நாயகியை பிரதானப்படுத்தும் இரு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தவிர, புதிதாக 7 இயக்குநர்கள் வேறு, இதேபோன்று நாயகியை முன்னிறுத்தும் கதையையே சொல்லியிருக்கிறார்களாம்.

நயன்தாராவின் நிஜமான ரசிகர்கள் பாவம்யா!

தமிழில் ‘சீமராஜா’ மற்றும் ‘யு-டர்ன்’ படங்கள் ஒரே நேரத்தில் வெளிவருவதைப் போல, தெலுங்கில் ‘யு-டர்ன்’ மற்றும் நாகசைதன்யா நடித்த ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ ஆகிய படங்கள் ஒன்றாக வெளியாகவுள்ளன. இந்த நேரத்தில், “எனது படங்கள் மட்டுமல்லாமல், என் கணவரின் படமும் நன்றாக ஓடவேண்டும் என்ற சிந்தனையால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று சமந்தா பேசியிருப்பதுதான் ஹைலைட்.

சமத்துப்புள்ளையா நீங்களே ஜோடியா நடிச்சிரலாமே?!

x