[X] Close

நடிக்கவந்திருந்தா சிரமம் இருந்திருக்காதேனு சிலசமயம் நினைச்சிருக்கேன் - இயக்குநர் ஷங்கர்


shankar

ரஜினி - ஷங்கர்

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 10:59 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

இந்த டைரக்‌ஷன்ல சிலசமயம் ஏற்படுற ஸ்ட்ரெஸ், டென்ஷன் வரும்போது நடிப்பு க்ளிக்காகியிருந்தா, நிம்மதியா இருந்திருக்குமேனு நினைச்சிருக்கேன் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

2.0. திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் ஷங்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

நடிக்கத்தான் சினிமால வந்தேன். பல நாடகங்கள்லயும் நடிச்சிருக்கேன். ஆனா டைரக்‌ஷன் பக்கம் காலம் இழுந்துட்டுப் போயிருச்சு. ஜென்டில்மேன் வந்துச்சு. என் தோள்ல அந்தப் படத்தோட வெற்றியின் கனம் இருந்துச்சு. அடுத்து காதலன் படம் பண்ணினேன். இந்த ரெண்டு படங்களோட வெற்றியைத் தாண்டிப் போகணும்னு உழைக்க ஆரம்பிச்சேன். கமலோட சேர்ந்து இந்தியன் பண்ணினேன்.

இப்படி ஒவ்வொரு படம் பண்ணி முடிக்கும் போதும் இலக்குகள் விரிவடைஞ்சுக்கிட்டே போச்சு. பொறுப்புகள் கூடுச்சு. ரெஸ்பான்ஸ்பிளிட்டி அதிகமாயிட்டே இருந்துச்சு. இது அப்படித்தான் இருக்கும். நம்மளை நம்பி தியேட்டருக்கு வர்ற ரசிகர்களுக்கு, இன்னும் பெட்டரா, இன்னும் பெட்டராக் கொடுக்கணும்னு பொறுப்புகள் ஏறிக்கிட்டே இருந்துச்சு. இப்பவும் அப்படித்தான்.

இதுமாதிரியான தருணங்கள்ல, ஒரு டைரக்டரா, ஒரு படம் பத்தின எல்லா விஷயங்களையும் தலைல போட்டுக்கத்தான் வேணும். அதனால ஸ்டெரெஸ், சிரமம், ஓவர் லோடுன்னு நம்மளை உலுக்கியெடுக்கும்.

அந்த சமயத்துல, ‘ச்சே... டைரக்‌ஷனுக்கு வராம, நடிப்புலயே இருந்திருந்தா, இவ்ளோ சிரமம் அனுபவிக்கவேண்டியிருக்காதேன்னு நினைச்சுக்குவேன். நடிக்கறதும் சிரமம்தான். ஆனாலும் இந்த அளவுக்கு இல்ல. உடம்பையும் முகத்தையும் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கணும். டைரக்‌ஷன் பொறுப்பு பத்தி யோசிக்கும் போது, நடிச்சிக்கிட்டே இருந்தா நல்லாருந்திருக்குமேனு சிலசமயங்கள்ல தோணும். ஆனா அது ஒரு அஞ்சு நிமிஷமோ பத்து நிமிஷமோ வந்துட்டு, தடக்குன்னு போயிரும். அப்படிப் போனதும் முன்பை விட இன்னும் உற்சாகமா டைரக்‌ஷன்ல ஒரு வேகத்தோட வேலை பாப்பேன்.

இவ்வாறு ஷங்கர் மனம் திறந்து தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close