[X] Close

ராசய்யா.. ராஜா… இளையராஜா!


ilayaraaja

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 22:03 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது இளையராஜாவின் 75வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்போது இளையராஜாவின் பாடல்கள் பாடியும், ஆடியும் பெண்கள் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்திக் காட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார்.

மாணவிகள் கேள்விகளுக்கு இளையராஜா அளித்த பதில்களின் தொகுப்பு:

நீங்கள் கேட்பது மாதிரியான பாடல்களை நான் கேட்க முடியாது. நீங்கள் இசையை உள்வாங்குவது, நான் இசையை உள்வாங்குவது வேறு மாதிரி இருக்கும். நான் ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்கு வராத ஐடியா இவனுக்கு வந்துருச்சே என்று ஆச்சர்யப்படுத்தணும். அப்படி இதுவரை நடந்ததில்லை. இப்படியொரு பல்லவி நமக்கு வரவில்லையே என்று நான் ஏங்கிய பல்லவிகள் நிறைய இருக்கிறது. அவையெல்லாம் முன்னோர்களுடையது. வருங்கால இசையமைப்பாளர்கள் கொடுக்கும் பாடல்களில் விஷயம் இருக்க வேண்டும்.

காற்றடிப்பது, புழுதி பறப்பது போல பாடல்கள் இருந்தால், அவை பாடல்களே அல்ல. ஒரு பாடல் என்பது உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எத்தனை ஜென்மமோ இது நமக்கு தொடர்புடையது என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதுவும் இப்போது நடப்பதில்லை. அது உங்களுக்கு நடக்கவில்லை என்றால், பாடலில்லை என்று ஒதுக்கிவிடுங்கள்.

எங்கப்பா எனக்கு ராஜய்யா, ஞானதேசிகன் என்று இரண்டு பெயர் வைத்தார். ஞானதேசிகன் என்பதை என் ஜாதகம் பார்த்து வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது சுருக்கமாக இருக்க வேண்டும் என்று ராஜய்யா என வைத்தார்.

சென்னைக்கு வந்தவுடன் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக் கொள்ளச் சென்றேன். பெயர் என்ன எனக் கேட்டார். ராஜய்யா என்றவுடன், நல்லாயில்லை ராஜா என வைத்துக் கொள் என பெயரை மாற்றினார். இசையமைப்பாளராக ஆனவுடன் என் பாடல்களுக்காக ஒரு கதையை உருவாக்கி 'அன்னக்கிளி' என்ற படமெடுத்தார் பஞ்சு அருணாசலம். அப்போது ராஜா என்று ஒருவர் இருக்கிறார். அதனால் இளையராஜா என்று வைச்சுக்கோ என்றார். அப்படித்தான் இளையராஜா என்ற பெயர் வந்தது.

இசை தான் ஆன்மிகம். ஆன்மிகம் தான் இசை. தமிழகத்தில் பானுமதி மற்றும் எஸ்.வரலட்சுமி ஆகியோரின் குரல் தனித்துவமானது. அதைப் போலவே என் மகள் பவதாரிணியின் குரல் வித்தியாசமானது.

இவ்வாறு இளையராஜா பதில்களை அளித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close